"வயநாடு பேரிடரை இன்னும் ஏன் தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை?" - கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கேள்வி..!! - Seithipunal
Seithipunal



வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் ஏன் அதை இன்னும் மத்திய அரசு அறிவிக்கவில்லை? என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுள்ளார். 

வயநாடு நிலச்சரிவு குறித்து விவாதிப்பதற்காக இன்று கேரளாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "இன்று கேரள அரசின் உயர்மட்டக் குழுவின் கூட்டமும், எதிர்க் கட்சிகளும் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடைபெற்றது. 

இந்த மீட்பு பணியில் ராணுவம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க, இயந்திரங்கள் கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும் சாலியாற்றில் தான் இதுவரை அதிக சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. எனவே அங்கு தொடர்ந்து சடலங்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. 

மேலும் இதில் உயிருடன் மீட்கப்பட்ட மக்களை தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வருகிறோம். விரைவில் இவர்களுக்கான புனர்வாழ்வு பணிகள் தொடங்கும். இந்த நிலச்சரிவில் மனிதர்கள் மட்டுமல்லாது, ஏராளமான விலங்குகளும் உயிரிழந்துள்ளன. 

இவற்றையெல்லாம் முறையாக அப்புறப் படுத்தவேண்டும் என்றால் இன்னும் சில நாட்கள் ஆகும். அதுவரை தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும். இந்த மீட்புப் பணிகளுக்காக 4 அமைச்சர்களும், ஐஏஎஸ் அதிகாரிகளும் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு உள்ளனர். 

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முன்பே மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் இப்போதுவரை மத்திய அரசு அதை செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த நிலச்சரிவில் சிக்கி 288 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why Didnt Wayanad Landslide Declared As National Disaster Kerala CM Pinarayi Vijayan Questioned Central Govt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->