கள்ளகாதலியுடன் இருந்த கணவர் - வெளுத்து வாங்கிய முதல் மனைவி.! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலியுடன் இருந்த கணவர் - வெளுத்து வாங்கிய முதல் மனைவி.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே நெல்லூரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. இவருக்கு கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

இந்த நிலையில், வாசு கடந்த 2017 ஆம் ஆண்டு மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்துள்ளார். இதனால், வாசு தன்னையும், தன் பிள்ளைகளையும் விட்டுச் சென்ற தன் கணவன் மீது வாசுவின் முதல் மனைவி கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

அதன் பின்னர் வாசு அடுத்த ஆண்டே வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இருப்பினும் சமீபகாலமாக வாசு நெல்லூரில் போஸ்டல் காலனியில் வசிக்கும் பெண் ஒருவருடன் ரகசிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். 

இதையறிந்த வாசுவின் முதல் மனைவி நேரம் பார்த்து, கணவனின் கள்ளக்காதலி வீட்டிற்கு உறவினர்களுடன் சென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து நியாயத்தைக் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி, போலீசார் விரைந்து வந்து வாசுவையும் அவரது மனைவியையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife attack husband in andira pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->