மனைவி காதலனுடன் ஓடிச் சென்றதால்.. ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கணவன்.!
Wife escaped lover husband bomb thread to railway station
மனைவி காதலனுடன் சென்றதால் ஆத்திரத்தில் கணவன் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதனிடையே ரயில் நிலையத்தில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டது பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில்களிலும் சோதனை அளிக்கப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.
இது வெறும் வதந்தி என்பது போலீசருக்கு தெரிய வந்தது. இதனிடையே ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ராஜேஷ் குமார் என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜேஷின் மனைவி காதலன் தப்பி சென்றதால் ஆத்திரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Wife escaped lover husband bomb thread to railway station