கணவனுக்கு மொட்டை அடித்து ஊர்வலமாய் அழைத்துச் சென்ற மனைவி - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கணவனுக்கு மொட்டை அடித்து ஊர்வலமாய் அழைத்துச் சென்ற மனைவி - நடந்தது என்ன?

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சத்யசாய் மாவட்டம் லேபாக்‌ஷி கிராமத்தைச் சேர்ந்தவர் உசேன். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கும், ரஹ்மத்பூரை சேர்ந்த நஜியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில் உசேன் கடந்த சில மாதங்களாக திலக் நகரை சேர்ந்த ஷபானா என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதுதொடர்பாக தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், உசேன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் பிரியாணி செய்து, அதனை அவர் தனது காதலி ஷபானாவுக்கு, கொண்டு போய் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மீண்டும் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால், ஆத்திரமடைந்த நாஜியா காதலி வீட்டில் தனிமையில் இருந்த கணவர் உசேனை தனது உறவினர்களுடன் சென்று கையும் களவுமாக பிடித்து வீதிக்கு அழைத்து வந்தார். பின்னர், இருவருக்கும் பாதி மொட்டை அடித்து, கைகளைக் கயிற்றால் கட்டி, செருப்பு மாலை அணிவித்து தெருக்களில் ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

இதையறிந்த போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife shaved her husband and took her in procession


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->