ஆதார்-பான் எண்ணை இணைக்காதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படுமா? - Seithipunal
Seithipunal


ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் உள்ள மக்களின் வங்கி பண பரிவர்த்தனை நடவடிக்கைகள், சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு வலியுறுத்தியது.

2 வருடத்திற்கு மேலாக பான் - ஆதார் எண்ணை இணைக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அதற்கான அவகாசம்  3 முறை நீட்டக்கப்பட்டது. இறுதியாக ஜூன் 30ம் தேதிக்குள் பான்-ஆதாரை இணைக்க இறுதி கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து நேற்றுடன் இந்த அவகாசம் முடிந்தது. நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர். வங்கி நடைமுறையை பின்பற்றாதவர்கள் தான் அதிகளவில் இணைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதுவரை எவ்வித அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதுகுறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி தான் வெளியிடும் என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது. இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகள் கூறுகையில், பானுடன் ஆதார் எண்ணை இன்னும் சிலர் இணைக்காமல் உள்ளனர். ஒருவருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது.

புதிதாக வாங்குவது போன்ற விவரங்கள் ஆதார் மூலம் தெரியவந்து விடும். வங்கியில் பணம், காசோலை பரிவர்த்தனை விவரங்கள் பான் கார்டு மூலம் தெரியும். இந்த இரண்டையும் இணைத்து விட்டால் ஒட்டுமொத்த ஒருவரது சொத்து, பண பரிவர்த்தனை தெரிந்து விடும்.

அதனால் சிலர் வேண்டுமென்றே இணைக்காமல் உள்ளனர். ஒருசிலர் அறியாமையால் இணைக்காமல் இருக்கின்றனர். இணைக்காதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்யும். இது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will the bank account of those who do not link Aadhaar-PAN number be frozen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->