பெங்களூர் : ரூ.28¾ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.! பெண் கைது
Woman arrested and 28 lakhs worth gold seized in bangalore airport
பெங்களூரு விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 28¾ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது மாலத்தீவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஒரு பெண்ணிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். பின்பு அவரை தனி அறைக்குள் அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டதில், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தப் பெண்ணிடம் இருந்த 532 கிராம் எடை கொண்ட ரூபாய் 28¾ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்தப் பெண்ணை கைது செய்த தேவனஹள்ளி விமான நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Woman arrested and 28 lakhs worth gold seized in bangalore airport