#மத்தியபிரதேசம் || புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.. காவல்நிலையம் முன் இளம்பெண் தீக்குளிப்பு..!
Woman attempted suicide Front of Police Station
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையம் முன் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஷஹதோல் பகுதியில் 26 வயது இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய இளைஞர் ஒருவர் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனை அடுத்து, அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. புகாரையும் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.இதற்கிடையில் இளம் பெண் மீண்டும் முதலமைச்சர் தனிப்பட்ட பிரிவில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, அந்த பெண் முதல்வரின் தனிபட்ட பிரிவில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து புகார் அந்த குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. விசாரணைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற போது அந்த பெண் தீ வைத்து கொண்டார். அந்த பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman attempted suicide Front of Police Station