ஜூஸ் குடித்த இளம்பெண் திடீர் மரணம் - வெளியான பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


ஜூஸ் குடித்த இளம்பெண் திடீர் மரணம் - வெளியான பகீர் தகவல்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டம் பெல்லாரே அருகே சேனி பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் வீட்டில் இருந்த ஒரு பழத்தை எடுத்து பழச்சாறு போட்டு குடித்துள்ளார். 

ஆனால், அந்த பழச்சாறை குடித்த சில மணி நேரத்தில் லீலாவதிக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், லீலாவதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் லீலாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

மேலும், விஷத்தன்மை கொண்ட பழத்தை அவர் பழச்சாறு போட்டு குடித்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பழச்சாறு குடித்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died after drink juice in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->