நடைபாதையில் தாறுமாறாக ஓடிய கார் - ஒருவர் பலி - 4 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூருவில் மன்னகுடா சந்திப்புக்கு அருகே இருக்கும் நடைபாதையில், மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த, வெள்ளை நிற ஹூண்டாய் இயான் கார் ஒன்று வந்தது.

இந்தக் கார் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் மற்றும் மூன்று சிறுமிகள் என்று ஐந்து பேர் மீது மோதிவிட்டு, மின்கம்பியை உடைத்துக்கொண்டு வேகமாகக் கடந்து சென்றது.

இந்த விபத்தில் 23 வயதுடைய ரூபஶ்ரீ என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆட்டோ மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்து குறித்துப் பேசிய காவல்துறையினர், "விபத்து ஏற்படுத்திய காரை மலேஷ் பல்தேவ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். 

விபத்து குறித்து ஏற்படுத்தியதற்குப் பிறகு அந்த நபர் காரை ஒரு ஷோ ரூம் முன்பு விட்டுவிட்டு, தனது வீட்டுக்குச் சென்று தனது தந்தையை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

அவர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died and four peoples injured for car accident in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->