வாந்தி எடுக்க தலையை வெளியில் நீட்டிய பெண் - நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


வாந்தி எடுக்க தலையை வெளியில் நீட்டிய பெண் - நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்.!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் பகுதியைச் சேர்ந்தவர் பாப்லி. இவர் தனது சகோதரி, சகோதரி கணவர் மற்றும் அவர்களின் 3 குழந்தைகளுடன் காஷ்மீர் கேட்டில் இருந்து லூதியானா செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். 

அப்போது, பாப்லிக்கு திடீரென வாந்தி வரும் உணர்வு ஏற்பட்டதனால், ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டியுள்ளார். அந்த நேரத்தில், மற்றொரு பேருந்து பாப்லி வந்த பேருந்தை முந்திச் செல்வதற்காக வேகமாக வந்துள்ளது.

இந்தப் பேருந்தில் பாப்லியின் தலை கொடூரமாக மோதி இரண்டு வாகனங்களுக்கும் இடையே சிக்கி நசுங்கியது. இதனால், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த கஅவரது குடும்பத்தினர் கதறி துடித்தனர். இதற்கிடையே இளம்பெண் மீது மோதிய பேருந்து நிற்காமல் அங்கிருந்து சென்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து, தகவலறிந்து வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார், இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் ஒருவர் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியில் நீட்டிய போது விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman died for head out of bus to vomit crushed another vechicle


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->