குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு - கேரளாவில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த 25ஆம் தேதி பிரியாணி சாப்பிட்ட சுமார் 70 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இவர்கள் அனைவரும் குழிமந்தி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட நிலையில் அதனுடன் வழங்கப்பட்ட மயோனைசை‌ சாப்பிட்டது தான் இந்த உடல்நல குறைவுக்கு காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசைபா என்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

பிரியாணி சாப்பிட்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மற்ற அனைவரும் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். மேலும், இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died for mandhi biriyani eat in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->