பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி.. உயிருக்கு எமனான உடன்படித்த மாணவர்கள்.. ராஜஸ்தானில் நடந்த கொடூரம்..!
Woman Murder In Rajastan
19 வயது மாணவியை சக மாணவர்கள் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஹலினா பகுதியில் 19 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். அந்த மாணவி அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், அந்த மாணவியுடன் படித்து வந்த ஐந்து மாணவர்கள் அவருக்கு பாலியல் உறவில் ஈடுப்பட வேண்டும் என தினம் வற்புறுத்தி வந்துள்ளனர்.
இதற்கு அந்த பெண் மறுக்கவே அவரை சித்திரவதை செய்து வந்துள்ளனர். சம்பவதன்று, அந்த மாணவியை பின் தொடர்ந்து வந்த அவர்கள் கட்டாயப்படுத்தி திரவத்தை வவாயில் ஊற்றி குடிக்க வைத்துள்ளனர். வீட்டிற்கு சென்ற அந்த இளம்பெண் வாந்தி எடுத்து மயக்கமடைந்த அவரை மீட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து 5 மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.