டெல்லியில் அதிர்ச்சி: 3வது மாடியில் இருந்து பச்சிளம் குழந்தையை வீசிய பெண்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியின் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள ஜெய் அம்பே அடுக்குமாடி குடியிருப்பு அருகே, பிறந்து சில மணி நேரமேயேன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி குடியிருப்பாளர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து குழந்தையை தெருவில் வீசியது யார் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்ததில், அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் ரத்த தடயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த குப்பை குட்டியே மூன்றாவது மாடியில் வசித்து வந்த 20 வயது பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருமணமாகாமல் கர்ப்பமானதும், அவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததும் தெரிய வந்தது.

மேலும் திருமணமாகாமல் குழந்தை பிறந்தது தெரிந்தால் அக்கம் பக்கத்தினர் இழிவாக பேசுவார்கள் என்பதால், வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக குழந்தையை வெளியே வீசியதாக அந்தப் பெண் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், வீட்டிலேயே குழந்தை பெற்றெடுக்கவே அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்தப் பெண் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman throws infant from 3rd floor in delhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->