டெல்லியில் பிரபல பெண் தாதா கைது..!
women arrested for drugs sales in delhi
நாட்டின் தலைநகர் டெல்லியின் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசார் நேற்று போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குண்டர் ஹஷிம் பாபாவின் மனைவியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 270 கிராம் ஹெராயினை மீட்டனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஸோயா கான் முசாபர்நகரில் இருந்து போதைப்பொருட்களை விநியோகிக்க கொண்டு வந்ததாக தெரியவந்தது. மேலும், நாதிர் ஷா கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் சிறப்பு பிரிவு சந்தேகிக்கிறது,
ஸோயாவின் குடும்பமும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையது. அதாவது அவரது தாயார் 2024ம் ஆண்டு பாலியல் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார், அவரது தந்தை போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
English Summary
women arrested for drugs sales in delhi