வயநாடு நிலச்சரிவு : முதன் முதலாக தகவல் கொடுத்த பெண் 4 நாட்களாக மண்ணில் புதையுண்டிருந்த அவலம்..!! - Seithipunal
Seithipunal



கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டகை, மெப்படி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல நூறு குடும்பங்கள் மண்ணில் புதையுண்டன. 

இதுகுறித்து சூரல்மலை கிராமத்தில் வசித்து வந்த நீது ஜோஜோ என்ற பெண் தான் முதன் முதலில் தகவல் கொடுத்துள்ளார். நள்ளிரவு 1.30 மணிக்கு சூரல்மலையில் உள்ள அவரது வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. உடனடியாக நீது ஜோஜோ தான் பணிபுரியும் வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார். 

இதையடுத்து அந்த நிறுவனத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது தான் மீட்புக் குழுவினருக்கு கிடைத்த முதல் தகவல் என்று கூறப்படுகிறது. இதனிடையே சூரல்மலையில் பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் உடனடியாக மீட்புக் குழுவினரால் அந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை என்று தெரிகிறது 

இதனிடையே வேறு ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்புக் குழுவினர் அங்கு சென்று விட்டதாகவும், பின்னர் மீண்டும் நீது ஜோஜோ வசிக்கும் பகுதிக்கு மீட்புக் குழுவினர் வந்தபோது அவர் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அவரது உடல் 4 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் கண்டெடுக்கப் பட்டுள்ளது. 

முன்னதாக உயிரிழந்த நீது ஜோஜோ வயநாடு மருத்துவ அறிவியல் கழகத்தில் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது 5 வயது மகன், அவரது கணவர் மற்றும் பெற்றோர் மற்றும் சிலர் மண் சரிவு ஏற்பட்ட போது அருகில் இருந்த மலை மீது ஏறிச் சென்றுள்ளனர். இதில் நீது மட்டும் மண்ணில் புதைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women Who Gave First Information About Wayanad Landslide Found Dead After 4 Days


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->