நடுரோட்டில் வயதான முதியவரை தாக்கிய 2 பெண் காவலர்கள்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள கைமூர் மாவட்டத்தில் வசித்து வரும் முதியவரான நவல் கிஷோர் பாண்டே (வயது 60) . இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது முதியவர் கீழே விழுந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே கைமூர் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அங்கு பணியில் இருந்த இரண்டு பெண் காவலர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனையடுத்து பெண் காவலர்கள் தங்கள் வைத்திருந்த கத்தியால் முதியவரை சரமாரியாக நடுரோட்டில் வைத்து தாக்கியுள்ளனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், முதியவரை தாக்கிய பெண் காவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens police attack old man in bhihar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->