அம்பானியின் அன்டிலியா முதல் தமிழகத்தின் ரூபா கணேசன் வரை! கின்னஸ் சாதனைகள்! - Seithipunal
Seithipunal


கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான பதிப்பில் இந்தியாவிலில் நிகழ்த்தப்பட்ட 60 சாதனைகள் இடம்பெற்றுள்ளன.

ஆண்டுதோறும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் புதிய சாதனைகள் சேர்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட புத்தகம் வெளியிடப்பட்டு வருகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள 2024-ஆம் ஆண்டுக்கான புத்தகத்தில், உலக அளவில் நிகழ்த்தப்பட்ட 2,638 சாதனைகள் இடம்பெற்றுள்ளன்.

நீா்வாழ் உயிரினங்கள், சாகசங்கள், தொழில்நுட்பம், கலை, விளையாட்டு உள்ளிட்ட 9 பகுதிகளும், வாழ்த்தரங்கம், இளம் சாதனையாளா்கள், விளக்கவுரைகள், கேமிங் உள்ளிட்ட 5 சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இதில், இந்தியாவின் சிரபுஞ்சியில் இரு நாள்களில் அதிக அளவு பதிவு செய்யப்பட்ட மழை அளவு உள்ளிட்ட 60 சாதனைகள் பெற்றுள்ளன.

மேகாலய மாநிலத்தின் சிரப்புஞ்சியில் 1995-ஆம் ஆண்டு ஜூலை 15,16 ஆகிய இரு நாட்கள் 2.493 மீ அளவில் பெய்த மழையே உலக அளவில் இரு நாட்கள் பதிவு செய்யப்பட்ட அதிகமான மழை அளவு என உலக வானிலை அமைப்பு சான்றளித்துள்ளது. இதனை கின்னஸ் சாதனையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், உலகின் மிக உயரமான மற்றும் விலை உயா்ந்த தனிநபரின் இல்லம் என்ற பெருமையை இந்திய தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் 27 மாடி இல்லமான ‘அன்டிலியா’ கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

மொ்மெய்ட் வடிவிலான யோகாசனத்தை 1.15 மணி நேரத்துக்கும் மேலாக தொடா்ந்து செய்து காட்டிய தமிழகத்தின் ரூபா கணேசனின் கின்னஸ் சாதனையும் இடம்பெற்றுள்ளது.

இந்தாண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற 30,000 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அதில் 2,638 சாதனைகள் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world Guinness record book 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->