உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?!
World powerful passport ranking 2024
லண்டனில் செயல்பட்டு வரும் ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் அமைப்பு உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் (கடவு சீட்டு) மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதை பொறுத்தே, அந்த நாட்து பாஸ்போர்ட்டின் தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் அமைப்பு நிர்ணயம் செய்துள்ளது.
அந்த வகையில் நம் இந்திய நாட்டின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
இந்தியா, செனகல் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 82-வது இடத்தில் உள்ளது.
இந்த உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தை மொத்தம் 6 நாடுகள் பிடித்துள்ளன.
2-வது இடத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகியவை உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 192 நாடுகளுக்குப் பயணிக்கலாம்.
3-வது இடத்தில் ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து லக்செம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 191 நாடுகளுக்குப் பயணிக்கலாம்.
English Summary
World powerful passport ranking 2024