அதிர்ச்சி! அமுல் மோர் பாக்கெட்டில் புழு! மன்னிப்பு கோரிய அமுல் நிறுவனம்! - Seithipunal
Seithipunal


அமுல் நிறுவனத்தின் மோர் பாக்கெட்டில் புழு இருக்கும் வீடியோவை வாடிக்கையாளர் பதிவிட்டுள்ளார். அதற்கு அமுல் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமுல் நிறுவனத்தின் மோர் பாக்கெட்டில் புழு நெளியும் வீடியோ சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இதனையடுத்து அமுல் நிறுவனம் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

அந்த பதிவில் ஒரு பதிவிட்டிருந்ததாவது, அமுல் இணையதளத்தில் பொருட்கள் வாங்குவது நிறுத்துங்கள். அமுல் உங்கள் அதிக புரதசத்து  நிறைந்த மோருடன் சேர்த்து எங்களுக்கு புழுவையும் அனுப்பி உள்ளார்கள் என்று கடுமையாக சாடி சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

அடுத்த  எக்ஸ் பதிவில், நான் அமுல் நிறுவனத்திற்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி உள்ளேன். இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் இணைத்துள்ளேன். நான் எந்த ஒரு பொய்யான  குற்றச்சாட்டையும் சொல்லவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக குஜராத்தில் உள்ள அமுல் தலைமை நிறுவன அலுவலகத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்ததாகவும் நடந்த இந்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worm in Amul More packet Amul apologized


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->