பாஜக அரசு அறிவித்த 04 கோடி பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ள தயாரான மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்..!
Wrestler Vinesh Phogat ready to receive the 4 crore prize money announced by the BJP government
சர்வதேச மல்யுத்த போட்டிகளில் சாதனை படைத்ததற்காக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்-க்கு ஹரியானா அரசு ரூ.04 கோடி பரிசுத்தொகையை அறிவித்து இருந்தது. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மல்யுத்தத்தில் வினேஷ் போகத் பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்றார். ஆனால், அரையிறுதியில் அவரின் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். தொடர்ந்து, ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் சாதனை படைத்த வினேஷ் போகத்தை கவுரவிக்க ஹரியானைாவை ஆட்சி செய்யும் பா.ஜ., அரசு முடிவு செய்தது. அவருக்கு ரூ.04 கோடி பரிசு, அரசு வேலை அல்லது இலவச வீட்டு மனை பட்டா இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், அவர் விருப்பப்படி அரசு நடந்து கொள்ளும் எனவும் முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், அரசு அறிவித்ததில் ரூ.04 கோடி பரிசுத் தொகையை தேர்வு செய்ய வினேஷ் போகத் முடிவு செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
English Summary
Wrestler Vinesh Phogat ready to receive the 4 crore prize money announced by the BJP government