யமுனை நதி விவகாரம்: கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை.. கோர்ட்டு அதிரடி!  - Seithipunal
Seithipunal


யமுனை நதி விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சோனிபட் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மேலும், ஆஜராகவில்லையெனில் எவ்வித கருத்தும் சொல்லவில்லை என்று கருதி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வரும் யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்படுவதற்கு முன்பு டெல்லி நீர் வாரியத்தின் என்ஜினீயர்கள் சரியான தருணத்தில் கண்டறிந்து, தடுத்தனர் என்றும் இல்லையெனில் இனப்படுகொலை எனும் அளவுக்கு அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்றும் நீருடன் விஷம் கலப்பதற்கு முன்பே அது தடுக்கப்பட்டது என கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி, அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், , விஷம் கலப்பதாக பொய் கருத்து தெரிவித்து டெல்லி மற்றும் அரியானா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கெஜ்ரிவால் மீது அரியானா அரசு சோனிபட் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தது.இதையடுத்து  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேஹா கோயல், வரும் 17ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.மேலும், ஆஜராகவில்லையெனில் எவ்வித கருத்தும் சொல்லவில்லை என்று கருதி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி நேஹா கோயல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Yamuna issue Legal action will be taken if Kejriwal fails to appear before court Court Action


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->