திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை.. நேற்று ஒரே நாளில் இத்தனை கோடியா..?
Yesterday day Tirupati Ezhumalayan temple bill Rs 4 crore 21 lakhs donation
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ.4.21 கோடி உண்டியல் காணிக்கையை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலக பிரசித்தி பெற்ற இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள். மேலும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
மேலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை, செலுத்துகிறார்கள். இந்நிலையில் ஒரே நாளில் ரூ. 4.21 கோடி உண்டியல் காணிக்கையை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். 43,862 பேர் மொட்டை அடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். மேலும் நேற்று அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை 85,450 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Yesterday day Tirupati Ezhumalayan temple bill Rs 4 crore 21 lakhs donation