கொள்முதல் செய்த 72 மணி நேரத்தில் விவசாயிகளுக்கு பணம்! உத்திர பிரதேச முதல்வர் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கான பணத்தை 72 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்திர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து பயிர் கொள்முதல் செய்யும் பணி நேற்று தொடங்கியது. 

இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் லக்னோவில் நடைபெற்றது.

இதில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அரசு நிர்ணயித்துள்ளபடி, ஒரு குவிண்டால் கோதுமை 2,015 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றார். மேலும்,  விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு, 72 மணி நேரத்தில் அதற்குரிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi Adityanath new order for farmers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->