கர்நாடகாவில் அதிர்ச்சி: இளம்பெண் கடத்தி கற்பழிப்பு.! 3 வாலிபருக்கு வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் விஜயாப்புரா பகுதியில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை 3 வாலிபர்கள் கேலி செய்துள்ளனர். இதனால் அந்த இளம் பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இளம்பெண்ணை அங்கிருந்து கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் மயக்கமடைந்த அந்த இளம்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள், இளம்பெண் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்து, உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இளம் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் மூன்று பேர் கடத்திச் சென்றதாகவும், அதில் ஒருவர் கற்பழித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young woman kidnapped and raped in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->