ம.பி அடுக்குமாடி கட்டிட தீவிபத்து.. காதலி ஏமாற்றியதால் தீவைத்தேன் இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்..! - Seithipunal
Seithipunal


காதலி ஏமாற்றியதால் அடுக்குமாடி குடியிருப்பில் தீவைத்ததால் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 அந்த விசாரணையில் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இளைஞர் ஒருவர் குடியிருப்பு பகுதிக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அந்த இளைஞர் சஞ்சய் அவரது காதலியை பழிவாங்க தீ வைத்ததாக தெரிவித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது,

அந்த குடியிருப்பில் தனது காதலி வசித்து வந்ததாகவும் அவருக்கு பல உதவிகள் செய்த  தெரிவித்தார். ஆனால், அவர் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது.அதனை அறிந்த நான் அவளிடம் சண்டையிடேன் மேலும், நான் கொடுத்த பணத்தையும் திரும்ப கேட்டேன். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரத்தில் அதிகாலையில் அவளது பைக்கிற்கு தீவைத்தேன்.

தீ மளமளவெனஎல்லா வாகனங்களும் பரவி குடியிருப்பு முழுவதும் தீபிடித்ததாக தெரிவித்தார். இந்த விபத்தில் அவரது காதலி மற்றும் அவரது தாயார் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில் அங்கு வசித்து வரும் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrasted who involved in the fire accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->