ராஜஸ்தானில் கொடூரம் - நிலத்தகராறில் வாலிபர் மீது ஏறி இறங்கிய டிராக்டர்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அடா கிராமத்தில் சகோதர முறை கொண்ட இரு குடும்பங்களுக்கு இடையே, நீண்டகாலமாக நிலத்தகராறு நீடித்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக இது தொடர்பான மோதலில் இரண்டு குடும்பங்களும் நேரடியாக ஈடுபட்டுள்ளன.

அதன் படி, இன்று காலையும் இரு குடும்பங்களுக்கு இடையே மீண்டும் ஏற்பட்டது . இதில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நிலத்தில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதனால் கோபமடைந்த மற்றொரு தரப்பினரைச் சேர்ந்தவர் டிராக்டரை எடுத்து வந்து, அதே வேகத்தில் கீழே படுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர் மீது டிராக்டரை ஏற்றி இறக்கினார். 

சுமார் 8 முறைகள் முன்னும் பின்னுமாக டிராக்டரை ஏற்றி இறக்கினார். இதில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் படி, போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth kill in property problam in rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->