தொண்டர்களுடன் முற்றுகை போராட்டம்: ஒய்.எஸ்.ஷர்மிளா அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், படித்து முடித்துள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். 

இதற்கிடையே ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஓய்.எஸ். ஷர்மிளா பெங்களூரில் இருந்து வந்து பிறகு அம்பாபுரத்தில் உள்ள முன்னாள் எம்.பி. ராமச்சந்திர ராவ் வீட்டிற்கு காரில் புறப்பட்டார். 

அப்போது போலீசார் ஷர்மிளாவின் காரை பின்தொடர்ந்தனர். இதனை அடுத்து ஷர்மிளா விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனியில் தங்கினார். 

இந்நிலையில் கட்சி தொண்டர்களுடன் விஜயவாடாவில் இருந்து புறப்பட்ட ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர். இதனால் தொண்டர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YS Sharmila arrest issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->