பெண் காவலரை தாக்கிய ஆந்திர முதல்வர் சகோதரி.. போலீசார் அதிரடி கைது.!
YS Sharmila attack in Telungana
தெலுங்கானாவில் அரசு பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக தெலுங்கானா மாநில ஒய்எஸ்ஆர்டிபி கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான சர்மிளா சென்றார்.
அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்து காரில் வேகமாக ஏற முயன்ற ஷர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ஷர்மிளா பெண் காவலர் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் ஆண் காவலர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.
அதன் பின்னர் பெண் காவலர்கள் சர்மிளாவை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்த நிலையில் சர்மிளா பெண் காவலரை கன்னத்தில் அறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
YS Sharmila attack in Telungana