தெலுங்கானாவில் குடியரசு தலைவர் ஆட்சி... ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பாஜக மற்றும் யுவஜன ஸ்ராமிகா ரைத்து தெலுங்கானா கட்சியின் தலைவி ஒய்.எஸ் ஷர்மிளாவும் கடுமையான நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சர்மிளா தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நேற்று ஹைதராபாத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒய்.எஸ் ஷர்மிளா சந்தித்து கோரிக்கை கடிதத்தை வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில் "முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் குரலை மிரட்டும் வகையில் தெலுங்கானாவில் நிலவும் பரிதாபமான சூழலை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு ஒரு பாசிச நிர்வாகம் மற்றும் மாநிலத்தின் சட்டத்தின் ஆட்சி இல்லை.

நான் மேற்கொண்ட யாத்திரையின் பொழுது சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் எங்களை தாக்கினர். அவர்கள் எங்கள் முகாம்களை சூறையாடியதோடு எங்கள் பொருட்களையும் அழித்ததோடு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தியுள்ளனர்.

மேலும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று என்னை அச்சுறுத்தியுள்ளனர். சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான கொலை வெறி தாக்குதலுக்கு ஆளுங்கட்சி நிதியுதவி செய்கிறது. எனவே தெலுங்கானா அரசை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ys sharmila request to tamilisai president rule in telangana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->