காலையிலே சோகம்! ஜிகா வைரஸ் காய்ச்சல் பரவல்! மத்திய,மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏடிஎஸ் வகை கொசு மூலம் பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் முன்னெச்சரிக்கையாக மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதை அடுத்து தேவையான முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை மத்திய அரசு மாநில சுகாதார அமைச்சகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\

கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் அதனால் கர்ப்பிணி பெண்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிகா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டால் கருவின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை குறை பிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவலி, தோல் வெடிப்பு, மூட்டு வலி உள்ளிட்டவை ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பின் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஜிகா வைரஸ் பாதிப்பு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zika virus outbreaks that affect pregnant women


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->