மீண்டுமா..? பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸொமாட்டோ! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal



இணையதளம் வழியாக உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ ஒவ்வொரு முறையும் உணவு வாங்கும் பொழுது பயனார்களிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டுக் கட்டணத்தை தற்போது 6 ஆக உயர்த்தியுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் ஸொமாட்டோ நிறுவனம் பயன்பாட்டுக் கட்டணத்தை 5 ஆக உயர்த்திய நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்துள்ளது. தற்போது டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

பயன்பாட்டு கட்டணம் என்பது விநியோக கட்டணம் சரக்கு மற்றும் சேவை வரி உணவு கட்டணம் மற்றும் சேவை கட்டணம் ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. அதிகரிக்கப்பட்ட பயன்பாட்டு கட்டணம் மற்றும் நகரங்களிலும் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டு கட்டணத்தை அறிமுகப்படுத்திய ஸொமாட்டோ நிறுவனம் 2 ரூபாய் கட்டணம் விதித்தது. பின்னர் லாபம் ஈட்டுவதற்காக பயன்பாட்டு கட்டணத்தை ஸொமாட்டோ நிறுவனம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. 

இணைய வழி உணவு விநியோக நிறுவனங்கள் பயன்பாட்டு கட்டணத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 1.25 கோடி முதல் ரூ. 1.5 கோடி வரை வருவாய் ஈட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயன்பாட்டு கட்டணம் உணவு விநியோகம் செய்யும் நபர்களுக்கு செலவுகளை கட்டுப்படுத்தவும் வருவாயை அதிகப்படுத்தவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 

.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zomato hikes usage charges


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->