தண்ணீரே சேர்க்காமல் செய்யப்படும் இனிப்பு.. ஆடிப்பூரம் ஸ்பெஷல் 'அக்காரவடிசல்' .. இந்த முறையில் செய்து அசத்துங்க..!! - Seithipunal
Seithipunal


'அக்கார வடிசல்' என்பது ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் வரும் தினமான 'ஆடிப்பூரம்' அன்று தமிழ்நாட்டில் பலரது வீட்டிலும் செய்யப் படும் ஒரு இனிப்பு வகையாகும். மேலும் இந்த அக்காரவடிசல் மார்கழி மாதத்திலும் ஆண்டாளுக்குப் படைக்கப்படும் மிக விசேஷமான இனிப்பாகும். 

தண்ணீரே சேர்க்காமல் முழுக்க, முழுக்க பால் சேர்த்து செய்யப்படும் இந்த அக்கரவடிசலின் எளிய செய்முறையைத் தெரிந்து கொள்வோம். 

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் பச்சரிசி மற்றும் 1/2 கப் பாசி பருப்பு சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின்னர் அவற்றை கழுவி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து, அதனுடன் 1- 1/2 லிட்டர் பால் சேர்த்து குறைவான தீயில் பாசிப் பருப்பு நன்கு மசியும் வரை வேக வைக்க வேண்டும்.  

அதே நேரம் இன்னொரு பக்கம் அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2-1/2 கப் வெல்லத்துடன், சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு, வெல்லம் நன்கு கரைந்த பிறகு, அதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வேகவைத்த பாசிபருப்புடன் சேர்த்து கொதிக்க விடவேண்டும். 

இப்போது இன்னொரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடான பிறகு அதில் 15 முந்திரி பருப்பு, 20 காய்ந்த திராட்சை சேர்த்து நன்கு சிவக்க வறுத்து அக்கரவடிசலுடன் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக 3 ஏலக்காய் மற்றும் கிராம்பை லேசாக இடித்து  அக்கரவடிசலுடன் கலந்து மேலும் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளலாம். அசத்தலான அக்கரவடிசல் ரெடி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadi Pooram Special Tasty Recipe Akkaravadisal


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->