சரும அழகை மேம்படுத்த உதவும் பீட்ரூட் .. எப்படி பயன்படுத்தலாம்..!
Beetroot Face pack
அனைவருக்கும் சருமத்தை அழகாகவும் மென்மையாகவும் வைத்திருக்க விரும்புவோம். அவர்கள் அனைவரும் பீட்ரூட்டில் பேஸ்பேக் செய்து பயன்படுத்தலாம். எப்படி பீட்ரூட்டை சருமத்திற்கு பயன்படுத்துவது என பார்போம்.
தேவையானவை :
பீட்ரூட் ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது:
கொடுக்கப்பட்ட பொருள்களை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளுங்கள். முகத்தை துடைத்து விட்டு அதன் பின் இந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவேண்டும்.
இவற்றை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்களை நீக்கலாம். சருமத்திற்கு ஈரபதத்தை தருவதுடன் சரும சுருக்கம் வராமல் தடுக்கும். இறந்த செல்களை நீக்குவதோடு ரத்த ஓட்டத்தை சீராக்கும். முகத்தில் உள்ள கருந்திட்டுகள் நீக்கும்.