பாகற்காயில் சிப்ஸ் செய்து இருக்கிறீர்களா ? அப்போ இதை படியுங்கள்..!
Bitter gourd Sips
வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபைபர் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் பாகற்காயில் அடங்கியுள்ளது. இத்தனை நன்மைகள் அடங்கிய பாகற்காயை சாப்பிட குழந்தைகள் அடம் பிடிப்பர். அதற்கு காரணம் அதன் கசப்பு. ஆனால், கசப்பு சுவை தெரியாமல் சுவையான சிப்ஸ் எப்படி செய்யலாம் என பார்போம்.
தேவையானவை:
பெரிய பாகற்காய்-4
பெருங்காயத்தூள்- சிறிதளவு
நசுக்கிய பூண்டு-ஒரு டேபிள்ஸ்பூன்
கடலை மாவு-5 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு-2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள்-2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்- சிறிதளவு
தயிர்-2 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப,
எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
பாகற்காயின் கசப்பை போக்க வட்டவட்டமாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 15 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பின் அதனை கழுவி பிழிந்து வைத்து கொள்ள வேண்டும்.
பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காயை பொறித்து எடுத்தால் சுவையான சிப்ஸ் தயார்.