வைட்டமின் நிறைந்த சுவையான "கேரட் தக்காளி சட்னி"..! செய்வது எப்படி.?
Carrot tomato chutney recipe
மிகவும் சுவையான வைட்டமின் நிறைந்த தக்காளி கேரட் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
கேரட் - 2
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 4 பபற்கள்
இஞ்சி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
சீரகம்
எண்ணெய்
கருவேப்பிலை
செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
இதையடுத்து நறுக்கி வைத்துள்ள கேரட், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு வதக்கிய பொருட்களை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில்ல சேர்த்தாள் சுவையான சத்து நிறைந்த தக்காளி கேரட் சட்னி ரெடி.
English Summary
Carrot tomato chutney recipe