சுவையான 'தேங்காய் பால் இறால் ரோஸ்ட்' இப்படி செய்து பாருங்க.! - Seithipunal
Seithipunal



சுவையான 'தேங்காய் பால் இறால் ரோஸ்ட்' எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
தேங்காய் பால் 
மஞ்சள் தூள் 
மிளகு தூள் 
வர மிளகாய் 
இஞ்சி பூண்டு 
உப்பு 
தேங்காய் எண்ணெய் 
பச்சை மிளகாய் 
கருவேப்பிலை 

செய்முறை: 
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், இறால், மஞ்சள் தூள், மிளகு தூள், வர மிளகாய், பூண்டு, சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

இதனை 30 முதல் 40 நிமிடம் வரை ஃப்ரீசரில் வைக்கவும். ஒரு பௌலில் 50 கிராம் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து வைத்துக்கொள்ளவும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்துள்ள இறால் துண்டுகளை சேர்க்கவும். மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி விடவும். இறால் இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

பின்னர் தயாரித்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை இறாலுடன் சேர்த்து மூன்று நிமிடங்கள் கிளறவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் பிரான் ரோஸ்ட் தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coconut milk prawn roast recipe in tamil


கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?




Seithipunal
--> -->