முகம், உடல் அழகாக மாற வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க.!  - Seithipunal
Seithipunal


ரோஜா இதழ்கள் இயற்கையாக தயாரிக்கப்படும் கிரீம்களில் சேர்க்கப்படுவதற்கான காரணம் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீக்கி அழகாகவும் மிருதுவாகவும் மாற்றித் தரும். 

இது சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதமாக மாற்றி தரும். இந்த ரோஜா இதழை சாப்பிட்டு வந்தால் வயிற்று கடுப்பு, சீதபேதி போன்ற பிரச்சனைகள் குணமடையும். 

உடலுக்கு குளிர்ச்சி தன்மை அதிகரிக்கும். மேலும் இந்த ரோஜா இதழ்களில் பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை வைத்து உடலை அழகாக்கும் பேஸ்டை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: 

எலுமிச்சை பழம் 
வெள்ளை வினிகர் 
ரோஜாப்பூ இதழ்கள் 
புதினா இலைகள் 

செய்முறை:

ரோஜா இதழ்கள் மற்றும் புதினா இலைகள் இரண்டையும் வெயிலில் நன்றாக காய வைத்து அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த பிறகு அதில் ஒரு கப் ரோஜா இதழ்களை சேர்த்து கொள்ள வேண்டும். 

இரண்டையும் நன்றாக கலந்த பிறகு எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக பேஸ்ட் போல் கலக்கி முகம் மற்றும் உடலுக்கு பயன்படுத்தலாம். 

உடலில் அரிப்புகள் மற்றும் அலர்ஜிகள் இருந்தால் எலுமிச்சை சாற்றுக்கு பதிலாக வெள்ளை வினிகர் சேர்த்து பயன்படுத்தலாம். 

இந்த பேஸ்டை உடல் மற்றும் முகம் முழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரம் உலர விட்டு பின்னர் தண்ணீரில் குளிக்கலாம். இதை வாரத்திற்கு 3 முறை அல்லது 4 முறை செய்துவந்தால் முகம் மற்றும் உடல் அழகாக மாறும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

face and body beauty tips


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->