இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான "தனியா சட்னி".! செய்வது எப்படி?
Healthy Coriander seeds chutney recipe
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சுவையான தனியா சட்னி சுலபமாக செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
தனியா - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 7
பூண்டு - 5 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கருவேப்பிலை
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும், தனியாவை போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
இதையடுத்து மிக்ஸியில் வறுத்த தனியா மற்றும் காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, தேங்காய் துருவல், சிறிதளவு தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நான்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சிறிதளவு கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்டினியில் சேர்த்தால் ஆரோக்கியமான தனியா சட்னி ரெடி.
English Summary
Healthy Coriander seeds chutney recipe