இரத்த சோகை வராமல் தடுக்க உதவும் சுவையான கறிவேப்பிலை சட்னி.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான ஆரோக்கியம் உள்ள கருவேப்பிலை சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கறிவேப்பில்லை - 1 கப்

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1டீஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

பச்சை மிளகாய் - 2

புளி - சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பில்லை - சிறிதளவு

செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும். பிறகு, அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு மிக்சியில் வறுத்த பொருட்களை போட்டு அதனுடன் புளி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டினால் சுவையான கருவேப்பிலை சட்னி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy curry leaves chutney


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->