பத்தே நிமிடத்தில் ஆப்பிள் டேட்ஸ் ஷேக்.! - Seithipunal
Seithipunal


உடலுக்குத் தேவையான சத்துக்களை பெற அடிக்கடி ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. இதில் நிறைய வகைகள் உள்ளது. அதில் ஆப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் 
பால்
பேரீச்சம் பழம்

செய்முறை:-

முதலில் பாலை தண்னீர் சேர்க்காமல் நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு ஆப்பிளை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பேரீச்சம் பழத்தை சிறுது நீரில் கழுவி, அதன் தோல் மற்றும் கொட்டையை நீக்கி வைக்கவும்.

இதையடுத்து ஆப்பிள் மற்றும் பேரீச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான ஆப்பிள் பேரிச்சம்பழம் ஷேக் தயார். இதில் தேவைப்பட்டால், சர்க்கரை அல்லது தேன் சேர்த்தும் குடிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make apple dates shake


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->