சுவை மிகுந்த கடலைப் பருப்பு அல்வா! செய்வது எப்படி.?
How to make Chana dal halwa
சுவைமிகுந்த கடலைப்பருப்பு அல்வா செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு -1 கப்
சர்க்கரை -1 கப்
நெய் - தேவையான அளவு
பால் -1/2 கப்
குங்குமப்பூ - 5
பாதாம் - 6
ஏலக்காய் பொடி
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு கடலைப்பருப்பை கழுவி, நீரை வடிகட்டிவிட்டு, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பாலில் குங்குமப்பூவைப் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து நெய்யை ஊற்றி, அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பைப் போட்டு மிதமான தீயில் கிளறி விட வேண்டும். பிறகு குங்குமப்பூ பால் மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
பருப்பானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி விட வேண்டும். பின்பு அல்வா பதத்திற்கு வந்ததும் சிறிதளவு நெய் ஊற்றி கிளறி, ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்தால் சுவையான கடலைப் பருப்பு அல்வா ரெடி.
English Summary
How to make Chana dal halwa