சுவைமிகுந்த சௌசௌ தால்! செய்வது எப்படி.?
How to make chow chow dal
சுவைமிகுந்த சௌசௌ தால் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
சௌசௌ - 1
பாசிப்பருப்பு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 8
பச்சை மிளகாய் - 2
சீரகம் -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
நெய்
உப்பு
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு சின்ன வெங்காயம் மற்றும் சௌசௌவை தோல் நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்த பருப்பை கடாயில் சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், சௌசௌ, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்பு சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை நெய்யில் தாளித்து, பாசிப்பருப்பு காய் கலவையில் சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும். அவ்வளவுதாங்க சுவையான சௌசௌ தால் ரெடி.
English Summary
How to make chow chow dal