கருப்பு உளுந்து சாப்பாடு செய்வது எப்படி ?
how to make karuppu ulunthu satham
கருப்பு உளுந்து சாப்பாடு செய்வது எப்படி ?
தற்போதைய உலகில் ஏராளமான மக்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. இதனால், அவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஏற்ற ஒரு உணவான கருப்பு உளுந்து சாப்பாடு செய்வது எப்படி என்று ந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
கருப்பு உளுந்து, எண்ணெய், அரிசி, வெந்தயம் , உப்பு , தண்ணீர், சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, துருவிய தேங்காய்

செய்முறை
கருப்பு உளுந்து தேவையான அளவு எடுத்து கடாயில் போட்டு நிறம் மாறும் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் அரிசி, வருத்து வைத்து இருக்கும் கருப்பு உளுந்து, வெந்தயம், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
இதனுடன் தண்ணீர் கலந்து கலந்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதி வந்த பிறகு குக்கர் மூடி ஒரு மூன்று வீசில் வந்தவுடன் குக்கரை இறக்கவும்.
இதையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கி சாதத்தில் போட்டு கிளறவும். அவ்வளவு தான் சூடான கருப்பு உளுந்து சோறு தயார்.
English Summary
how to make karuppu ulunthu satham