சுவையான அனைவருக்கும் பிடித்த பன்னீர் கீர்.! செய்வது எப்படி.?
How to make Paneer kheer
சுவையான அனைவருக்கும் பிடித்த பன்னீர் கீர் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
துருவிய பன்னீர் - 1/2 கப்
சுண்ட காய்ச்சிய பால் - 3/4 கப்
குங்குமப்பூ - சிறிதளவு
பால் - 1/2 லிட்டர்
உலர்ந்த திராட்சை
பாதாம் அளவு
ஏலக்காய் பொடி - சிறிதளவு
செய்முறை:
முதலில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீரை மற்றும் பால் சேர்த்து 5-6 நிமிடங்கள் விடாமல் கிளறிக் கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
பிறகு சுண்டக் காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக கிளறவும். பின்பு ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, உலர்ந்த திராட்சை மற்றும் நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து கிளறவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொஞ்சம் குளிர வைத்து பரிமாறலாம்.