ஆரோக்கியமான மாதுளை ராய்த்தா! செய்வது எப்படி.?
How to make Pomegranate raita
அனைவருக்கும் பிடித்த ஆரோக்கியமான மாதுளை ரைத்தா செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையானப் பொருட்கள்:
மாதுளை முத்துக்கள் - 1 கப்
தயிர் - 1/2 கப்
வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இதில் மாதுளை முத்துக்களை சேர்த்தால் மாதுளை ரைத்தா ரெடி.
English Summary
How to make Pomegranate raita