ஆந்திரா ஸ்டைலில் பூண்டு இட்லி பொடி தயார் செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


இட்லிக்கு சுவையான பூண்டு மிளகாய் பொடி தயார் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம். 

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு
உளுத்தம் பருப்பு
பயட்கி மிளகாய்
காய்ந்த மிளகாய்
எள் 
பொட்டுக் கடலை
கறிவேப்பிலை
பெருங்காயப்பொடி
பூண்டு 

செய்முறை:-

முதலில் அடுப்பில் ஒரு கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பு உள்ளிட்டவற்றை தனித்தனியாக நன்றாக வறுக்கவும். பின்னர் அதே கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, பயட்கி மற்றும் காய்ந்த மிளகாய்யை சேர்த்து வதக்கவும். 

இவை நன்கு வதங்கியதும் எள் சேர்க்க வேண்டும். எள் வெடிக்கத் துவங்கியதும் பொட்டு கடலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்ki, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

இது ஆறிய உடன் மிக்சி ஜாரில் போட்டு பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இப்போது சுவையான ஆந்திர ஸ்டைல் பூண்டு இட்லி பொடி தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make poondu idli podi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->