அல்டிமேட்டான புளியோதரை பொடி - வாங்க பார்க்கலாம்.! - Seithipunal
Seithipunal


என்னதான் நம் வீட்டில் புளியோதரை செய்தாலும் கோவில்களில் தரும் புளியோதரை சாதம் ஒரு தனி டேஸ்ட் தான். அந்த வகையில் இந்த புளியோதரை சாதத்திற்கு போடும் பொடி எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

உளுத்தம் பருப்பு 
கடலை பருப்ப
வர மல்லி
சீரகம் 
வெந்தயம் 
மிளகு 
எள்ளு 
அரிசி 
கறிவேப்பிலை
எண்ணெய்
புளி
பெருங்காயம்
வர மிளகாய்
கருப்பட்டி 
மஞ்சள் தூள்
உப்பு 

செய்முறை

முதலில் கடாயை சூடாக்கி, அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வரமல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், எள்ளு, அரிசி, வர மிளகாய் என்று அனைத்தையும் வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

தொடர்ந்து எண்ணெய் ஊற்றி புளி, கட்டி பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஆற வைத்து உப்பு, மஞ்சள் தூள் மற்றும் கருப்பட்டி சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான் சுவையான கோவில்களில் செய்யும் புளியோதரை சத்தத்திற்கு போடப்படும் பொடி தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make puliyotharai powder


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->