சுவையான முள்ளங்கி ஸ்வீட் அல்வா! செய்வது எப்படி.?
How to make Radish sweet halwa
சுவையான முள்ளங்கி சுவீட் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
துருவிய சிவப்பு முள்ளங்கி - 1 கப்
பனங்கற்கண்டு - 1 1/2 கப்
நெய் - தேவையான அளவு
முந்திரிப் பருப்பு -5
செய்முறை:
முதலில் பனங்கற்கண்டை மிக்ஸியில் போட்டு நன்கு பொடிக்கவும். பின்பு கடாயை அடுப்பில் வைத்து சிவப்பு முள்ளங்கி துருவலுடன் சிறிதளவு நீர் சேர்த்து வேகவைத்து, அதனை மிக்ஸியில்போட்டு மையாக அரைக்கவும். மற்றொரு கடாயில் பனங்கற்கண்டு பொடியைப் போட்டு அது மூழ்கும் வரை நீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பனங்கற்கண்டு கரைந்ததும் அதை வடிகட்டவும்.
பின்பு வடிகட்டிய பனங்கற்கண்டு கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து லேசான கம்பிப்பதம் வந்ததும், அரைத்த முள்ளங்கி விழுது, பொன்னிறமாக வறுத்த முந்திரிப்பருப்பு, சிறிதளவு நெய் சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும் அவ்வளவுதான் முள்ளங்கி அல்வா ரெடி.
English Summary
How to make Radish sweet halwa