மருத்துவத்தை அள்ளி தரும் சாமை கல்கண்டு சாதம்..!
how to make samai kalkandu satham
பல்வேறு மருத்துவகுணம் கொண்ட சாமை அரிசியை பயன்படுத்தி இனிப்பான கல்கண்டு சாதம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி
பயத்தம் பருப்பு
நெய்
கல்கண்டு
முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை
தண்ணீர்
செய்முறை:
முதலில் பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து சாமை அரிசியுடன் சேர்த்து தண்ணீரில் களைந்து, குக்கரில் 6 விசில் வரும் வரை வேக விடவும். இதற்கிடையே, கல்கண்டை மிக்சியில் பொடியாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பு, உலர் திராட்சையை வறுக்கவும். பின்னர் வேக வைத்த சாமை அரிசியில் தேவையான அளவு நெய், கல்கண்டு தூள், முந்திரிப் பருப்பு. திராட்சை சேர்த்து கிளறி, சூடாக பரிமாறவும்.
English Summary
how to make samai kalkandu satham