சோளத்தில் வெரைட்டி பணியாரம் - இதை மட்டும் செய்யுங்க.!
how to make sola paniyaram
சோளம் மிக முக்கியமான உணவு பொருள்களில் ஒன்று. இந்த சோளத்தை வைத்து கார பணியாரம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையானவை:
சோளம்
உளுந்து
வெந்தயம்
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
கல் உப்பு
செய்முறை:
முதலில் சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
நன்கு புளித்த பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால், அது காரப் பணியாரம். இதுவே அரைத்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு, கலந்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம்.
English Summary
how to make sola paniyaram